Wednesday, April 14, 2010

தற்கொலை அதிகரிப்பு!

அகமதாபாத் :
குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளால் வாழ பிடிக்காமல் பெண்கள் தற்கொலை செய்வதாக குஜராத் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
குஜராத்தில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2007ல் மொத்தம் 5,580 பேர் தற்கொலை செய்தனர். இது 2008ல் 6,165 ஆக அதிகரித்துள்ளது. இப்படி தற்கொலை செய்து கொள்பவர்களில் பலர் பெண்கள். அதிலும், வேலைக்கு செல்லும் பெண்களைவிட குடும்ப பெண்கள்தான் அதிகம் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் கடந்த 2008ல் தற்கொலை செய்தவர்களில் 1,744 பேர் குடும்ப பெண்கள்.
மனம்விட்டு பேசுவது குறைவு:சமூகவியல் நிபுணர் போராசிரியர் எட்வின் மாசிஹி கூறுகையில், ÔÔவேலைக்கு செல்லாத பெண்கள் வரதட்சணை, ஆண் குழந்தை பெற்றெடுக்கவில்லை என்பது உள்ளிட்ட பல காரணங்களுக்காக கொடுமை படுத்தப்படுகிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்களில் பலர், கூட்டுக் குடும்பத்தை விரும்புவது இல்லை. ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக அவர்கள் கூட்டு குடும்பத்தில் வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது. கூட்டு குடும்பமாக வாழ பிடிக்காமல் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில், கணவன், மனைவி, குழந்தைகள் மனம்விட்டு பேசுவது குறைந்துவிட்டது. இதுவும் தற்கொலை அதிகரிக்க காரணம்.

No comments:

Post a Comment

Blog Archive

About This Blog

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP