Wednesday, September 15, 2010

தமிழ்நாட்டில் இருந்து 3,979 பேர் ஹஜ் பயணம்: கூடுதலாக 735 இடங்கள்

சென்னை: ஹஜ் கமிட்டி மூலம் தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள மேலும் 262 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது குறித்து ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் அபுபக்கர் கூறியதாவது,

இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பம் செய்திருந்தனர். எனவே, ஏற்கனவே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை அதிகரிக்குமாறு மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திற்கு தமிழக முதல்வர் [^] கருணாநிதி [^] கடிதம் எழுதினார்.

முதல்வரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு முதல் கட்டமாக 399 கூடுதல் இடங்களை மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் ஒதுக்கியது.

இதைத் தொடர்ந்து 2ம் கட்டமாக 74 இடங்களும், 3ம் கட்டமாக 262 இடங்களும் ஒதுக்கியுள்ளது. இந்த கூடுதல் இடஒதுக்கீட்டால் தற்போது தமிழ்நாட்டில் இருந்து 3,979 பேர் ஹஜ் பயணம் செல்லவிருக்கின்றனர்.

கூடுதல் இடம் ஒதுக்க கடிதம் எழுதிய முதல்வருக்கும், இடம் ஒதுக்கிய மத்திய அமைச்சகத்திற்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஹஜ் யாத்திரிகர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் தொடர்பான கூட்டம் [^] வரும் 16ம் தேதி மும்பையில் நடக்கிறது என்றார்.

என்ன தீர்ப்பு வந்தாலும் ராமர் கோவிலை கட்டியே தீருவோம்: ராம கோபாலன்

கோவை: நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் பேசிய அவர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை எங்கும் இஸ்லாமியர்கள் மத மோதல்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தென் கொரியாவில் சாலையெங்கும் புத்த சிலைகள் நிறைந்திருந்தது. அப்போது அமெரிக்க பிரதிநிதிகள் தென் கொரிய பிரதிநிதிகளிடம் சாலையெங்கும் இருக்கக்கூடிய புத்தர் சிலையை எடுத்து விடுங்கள் என்று சொல்லியதன் பேரில், தென் கொரிய பிரதிநிதிகள் சிறிய சிலைகளை எடுத்தார்கள்.

சிலைகளை எடுப்பதற்கு முன்னர் பௌத்தர்கள் 60 சதவீதம் இருந்தார்கள். கிருஸ்தவர்கள் 40 சதவீதம் இருந்தார்கள். சிலைகளை எடுத்தப் பின்னர் கிருஸ்தவர்கள் 60 சதவீதமாக மாறிப்போனார்கள். பௌத்தவர்கள் 40 சதவீதமே இருக்கின்றனர்.

அதே போலத்தான், இங்கேயும் சாலைகளில் உள்ள கோவில்களை அகற்றிவிட்டு, சர்ச்சுகளும் மசூதிகளும் நிறைந்துவிட்டன.

அயோத்தியில் உள்ள இடம் யாருக்கு சொந்தம் என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு அறிவிக்க உள்ள இந்த நேரத்தில், நாம் சொல்லிக்கொள்வது என்னவென்றால், என்ன தீர்ப்பு வந்தாலும் கவலையில்லை. ராமர் கோவிலை அங்கே கட்டியே தீருவோம்.

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தீர்ப்பை மதிப்போம் என்கிறார். ஆனால், இஸ்லாமியர்கள் யாரும் தீர்ப்பை மதிப்போம் என்று சொல்லவில்லை. இதற்கிடையே தீர்ப்பு வரும் இந்த நேரத்தில் இஸ்லாமியர்களின் மனைவிகளும், குழந்தைகளும் பத்திரமான இடத்திற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால், ஏதோ ஒரு பெரிய கலவரத்தை அரங்கேற்ற இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

கோயம்பத்தூரில் கல்லூரி மாணவிகளை இஸ்லாம் இளைஞர்கள், பேச்சுக் கொடுத்து மயக்கி 'லவ் ஜிகாத்' என்ற முறையில் அவர்களை இஸ்லாமுக்கு மாற்றுகிறார்கள். மாற்றியதோடு மட்டுமல்லாமல், அவர்களை இந்துகளுக்கு எதிராக பயங்கரவாதிகளாக மாற்றுகிறார்கள்.

முதல்வர் கருணாநிதி திருந்திவிட்டார், அவருக்கு தெய்வ பக்தி வந்துவிட்டது என்று பலர் சொல்லுகிறார்கள். ஆனால் அது சுத்தப் பொய். அவர் எப்போதும் திருந்தவே மாட்டார். அவர் எப்போதும் இந்துகளுக்கு எதிராகத்தான் இருப்பார். இவ்வாறு கூறியுள்ளார்..

நிதிமன்றம் என்ன தீர்பை கூறினாலும்.. நாங்கள் நிதிமன்ற தீர்பை மதிக்கமாட்டோம் என்று கூறுவதிலிருந்து இவர்கள் எவ்வளவு பெரிய அயோக்கியர்கள் என்பதை நடுநிலையாக சிந்திக்களாம்...

Sunday, September 5, 2010

ஈரானில் மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள பெண்ணுக்கு மேலும் ஒரு தண்டனை: 99 கசையடிகள்

ஈரானில் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுஇகல்லால் எறிந்து கொல்லப்படவுள்ள நிலையில் ஷகீனா மொஹமதீ அஸ்தியானி என்ற பெண்ணுக்கு 99 கசையடிகள் வழங்கப்படவேண்டும் என்று மேலும் ஒரு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

தலையில் முக்காடு இன்றி லன்டன் பத்திரிகையொன்றில் இவரது படம் வெளியானதே இந்தப் புதிய தண்டனைக்குக் காரணமாகும்இதலையில் முக்காடின்றி பெண்கள் வெளியில் வருவதோ அவர்கள் படங்கள் வெளிவருவதோ ஈரானில் தண்டனைக்குரிய குற்றமாகும்.

 

இந்நிலையில் அஸ்தியானி பற்றிய செய்தியொன்று அவரின் புகைப்படத்தோடு டைம்ஸ் ஒப் லண்டன் பத்திரிகையில் அன்மையில் வெளியானது.அதில் அஸ்தியானி முக்காடின்றி காணப்படுகின்றார்.

 

ஆனால் இந்தப் படம் அஸ்தியானியுடையதல்ல என்றும் அது தவறாகப் பிரசுரமானது என்றும் சம்பந்நப்பட்ட பத்திரிகை விளக்கமளித்துள்ளது.அந்தப் படம் உண்மையிலேயே தற்போது சுவீடனில் வசித்துவரும் ஈரான் அரசியல் அதிருப்தியாளரான சுசான் ஹெஜாரத் என்பவருடையது.

 

இவர் இந்தப் பத்திரிகைக்கு அஸ்தியானி சம்பந்தப்பட்ட செய்தியை அனுப்பும் போது ஈமெயில் மூலமாக இரண்டு புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.அதில் முக்காடின்றி காணப்படுவது சுசானின் புகைப்படம்.

 

ஆனால் பத்திரிகை இதை தவறாக அஸ்தியானி என்ற விளக்கத்தோடு பிரசுரித்துவிட்டது. மரணதண்டனைக்கு முன் கசையடி தண்டனை விதிக்கப்பட இதுவே காரணமாகும். இந்தத் தண்டனைகளை நிறைவேற்றக் கூடாது எனவும் அதற்கு எதிராகவும் சர்வதேச அமைப்புக்கள் பல குரல் கொடுத்துள்ளன

Saturday, August 7, 2010

இரண்டாம்நிலை காவலர் தேர்வு‌க்கு 8ஆ‌ம் தேதி எழுத்து தேர்வு

தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் புதிய ஆண்-பெண் இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய வரு‌ம் 8ஆ‌ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவ‌‌ல்துறை, தீயணைப்பு படை, சிறைத்துறைக்கு புதிதாக 10 ஆயிரத்து 112 ஆண்-பெண் இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு வரு‌ம் 8ஆ‌‌ம் தேதி காலை 10 மணிக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அழைப்பு கடிதம் கிடைக்கப் பெற்ற விண்ணப்பதாரர்கள் அன்றையதினம் காலை 9 மணிக்கே தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும். விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்துக்கு வரும்போது அழைப்பு கடிதத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை படித்து தெரிந்து வரவேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்வு மையத்துக்குள் செல்போன் போன்ற எலக்ட்ரானிக் உபகரணங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. விண்ணப்பதாரர்கள் நீலம் அல்லது கறுப்பு பந்துமுனை பேனா மட்டுமே தேர்வு எழுத எடுத்து செல்லவேண்டும்.

சென்னையை பொறுத்தமட்டில் டி.எஸ்.கிருஷ்ணாநகர் சென்னை-37இல் உள்ள வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள எத்திராஜ் பெண்கள் கல்லூரி ஆகிய 3 மையங்களில் தேர்வு நடைபெறும்.

அழைப்பு கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் www.tn.gov.in/tnusrb என்ற இணையதளத்தில் தங்களது பெயர் மற்றும் பிறந்த தேதியை தட்டச்சு செய்து பார்த்து உரிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

தகுதியுள்ளவர்களாக இருந்தும் அழைப்பு கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் தங்களுடைய பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு மையம் ஆகிய விவரங்கள் அடங்கிய இணையதளத்தில் நகல் எடுத்த பக்கத்தில் தங்களின் புகைப்படத்தை ஒட்டி அதில் பதிவு பெற்ற அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று தேர்வு மையத்துக்கு எடுத்து சென்றால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எ‌‌ன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் டி.ஜி.பி. ராமானுஜம் தெரிவித்துள்ளார்.

Saturday, July 31, 2010

தமிழகத்தில் பல ரயில்களின் நேரம் மாற்றம்!

சென்னை: தமிழகத்தில் பல ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இரவு 8.50 மணிக்கு பதிலாக 8.05 மணிக்கும்,

எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.15 மணிக்கு பதிலாக இரவு 8.50 மணிக்கும்,

எழும்பூரில் இருந்து மதுரை வரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.45 மணிக்கு பதிலாக இரவு 9.15 மணிக்கும்,

எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7.55 மணிக்கு பதிலாக இரவு 9.40 மணிக்கும் புறப்பட்டு செல்லும்.

அதே போல திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 6.30 மணிக்கு பதிலாக மாலை 6.45 மணிக்கு புறப்படும்,

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 6.15 மணிக்கு பதிலாக மாலை 5 மணிக்கும்,

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் இரவு 10 மணிக்கு பதிலாக 10.20 மணிக்கும் திருச்சியிலிருந்து புறப்படும்.

மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்டு 5ம் தேதி முதல் இரவு 9.45 மணிக்கு பதிலாக இரவு 9.10 மணிக்கு புறப்படும்.

நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ஆகஸ்டு 6ம் தேதி முதல் ரயில் 7.40 மணிக்குப் பதிலாக மாலை 5 மணிக்கு அந்த ஊரில் இருந்து புறப்படும்.

அதே போல மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 5.30 மணிக்கு வர வேண்டிய ரயில் காலை 5.10 மணிக்கும்,
நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு காலை 8.55 மணிக்கு வரவேண்டிய ரயில் காலை 6 மணிக்கும், திருநெல்வேலியில் இருந்து எழும்பூருக்கு காலை 6.15 மணிக்கு வரவேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் 6.35 மணிக்கும்,
ராமேஸ்வரத்தில் இருந்து எழும்பூருக்கு காலை 6.40 மணிக்கு வரவேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.25 மணிக்கும், மதுரையில் இருந்து எழும்பூருக்கு காலை 7.55 மணிக்கு வரவேண்டிய ரயில் காலை 7.20 மணிக்கும்,

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 5.10 மணிக்கு வரவேண்டிய மலைகோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 5.30 மணிக்கும் வந்து சேரும்.

இதே போல எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் காலை 9 மணிக்குப் பதிலாக காலை 8.15 மணிக்கு சென்று சேரும்.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலிக்கு காலை 8.50 மணிக்கு பதிலாக காலை 8.30 மணிக்கும்,

எழும்பூரில் இருந்து காலை 6.45 மணிக்கு மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் காலை 6.15 மணிக்கும், சென்னை எழும்பூரில் இருந்து காலை 8.35 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடைய வேண்டிய ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் காலை 11.45 மணிக்கும் வந்து சேரும்.

இதில் நாகர்கோவில்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் 7ம் தேதி முதலும், மதுரை-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் 6ம் தேதி முதலும், மற்ற ரயில்கள் 2ம் தேதி முதலும் நேரம் மாற்றப்பட்ட அட்டவணைபடி இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Blog Archive

About This Blog

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP