Wednesday, April 21, 2010

ஐபிஎல் அனைத்து அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர்கள் அலுவலகங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று மாலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

ஐபிஎல் அணிகளை ஏலத்தில் எடுத்ததிலும்,போ‌ட்டிகளை தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ல் ஒ‌‌ளிபர‌ப்பு செ‌ய்ய போட‌ப்ப‌ட்டு‌ள்ள ஒ‌ப்ப‌ந்த‌‌ங்க‌ள் போன்றவற்றிலும் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மு‌ம்பை‌யி‌ல் உ‌ள்ள எ‌ம்.‌எ‌‌‌ஸ்.எ‌ன். ம‌ற்று‌ம் ட‌பி‌ள்யூ எ‌ஸ்.‌வி எ‌ன்ற இர‌ண்டு நிறுவன‌ங்க‌ளில் இன்று காலை வருமானத் துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அதுமட்டுமல்லாது மும்பை, பஞ்சாப் அணி உரிமையாளர்கள் மற்றும் அனைத்து அணிகளின் உரிமையாளர்களின் அலுவலகங்களிலும்,வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று மாலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்க அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இங்கு சோதனை மேற்கொள்ளப்பட்ட அதே நேரத்தில், ஈடன் மைதானத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சொந்தமான ஷாரூக் கான் - ஜூகி சாவ்லா இணையின் "ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மெண்ட்" அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான சென்னையிலுள்ள இந்தியா சிமெண்ட்ஸ் அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Blog Archive

About This Blog

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP