தனியார் பள்ளிகளின் மிரட்டலுக்கு அரசு அடிபணியாது: அமைச்சர் தங்கம் தென்னரசு
கல்வி கட்டண அறிவிப்பை வாபஸ் பெறாவிட்டால் பள்ளிகளை திறக்கப்போவதில்லை என்று தனியார் பள்ளிகள் விடுத்துள்ள மிரட்டலுக்கு தமிழக அரசு அடிபணியாது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கடந்த வாரம் தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்தது.இதனை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
தனியார் பள்ளிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு கட்டணம் நிர்ணயிப்பதால் கல்வித் தரம் பாதிக்கப்படும் என்றும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டார்.
தமிழக அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கோவிந்தராஜன் கமிட்டி அளித்த பரிந்துரையின் படி கல்விக் கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது என்றார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 11 ஆம் தேதியன்று தீர்ப்பளித்து தனியார் பள்ளிகளின் மனுவை நிராகரித்தனர்.
இதனையடுத்து தனியார் பள்ளி உரிமையாளர்கள் அவசரமாக கூடி ஆலோசித்து,கல்வி கட்டண அறிவிப்பை வாபஸ் பெறாவிட்டால் பள்ளிகளை திறக்கப்போவதில்லை என்று அரசுக்கு மிரட்டல் விடுத்தனர்.
இந்நிலையில் தனியார் பள்ளிகள் விடுத்துள்ள இந்த மிரட்டலுக்கு தமிழக அரசு அடிபணியாது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டசபையில் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Friday, May 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment