அரபிக்கடலில் புயல் சின்னம்: கேரளத்தில் பருவமழை ஆரம்பம்..சில நாட்களில் தமிழகத்தில்!!
சென்னை: கேரளத்திலும் தென் தமிழகத்திலும் பல இடங்களி்ல் தென் மேற்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளது.
இதையடுத்து சில நாட்களில் வெயிலின் தாக்கம் பெருமளவில் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அக்னி நட்சத்திரம் கடந்த 28ம் தேதியுடன் முடிவடைந்தாலும் தமிழகம் முழுவதும் வெயில் தொடர்ந்து சுட்டெரித்து வந்தது.
இந் நிலையில் தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கு அறிகுறியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கேரளாவிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
இந்த மழை படிப்படியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் பரவும். அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் படிப்படியாக வெப்பமும் தணியும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அரபிக்கடலில் புயல் சின்னம்:
இதற்கிடையே கேரளத்தை ஒட்டி அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் அஜித் யோகி நிருபர்களிடம் கூறுகையி்ல்,
தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி கேரளாவில் தொடங்கிவிட்டது.
இந் நிலையில் தற்போது அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுக்க அதிக வாய்ப்புள்ளது.
புயல் சின்னத்தால் பருவமழை தீவிரமடைந்து மேற்கு கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தீபகற்ப பகுதிகள் அதிக மழையைப் பெற வாய்ப்புள்ளது என்றார்.
Tuesday, June 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment