புகாரைப் பெறாமல் பெண்ணை அலைய விட்ட சென்னை போலீஸ் - கமிஷனர் விசாரணை
சென்னை: சென்னையைச் சேர்ந்த பெண்ணிடம் புகாரைப் பெறாமல் அவரை அலைய விட்ட சென்னை போலீஸாரிடம், கமிஷனர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். சம்பந்தப்பட்ட போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்படவுள்ளனர்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் செல்வி. இவர் ஐஸ்அவுசில் உள்ள அக்கா வீட்டுக்கு பஸ்சில் வந்தார். அப்போது கிண்டியில் கைக்குழந்தையுடன் ஏறிய இளம்பெண் ஒருவர் செல்வியிடம் இருந்த 7 பவுன் நகையை ஜேப்படி செய்து விட்டு தப்பிச்சென்றார்.
இது குறித்து ஜஸ்அவுஸ், கிண்டி, வேளச்சேரி போலீஸ் நிலையங்களில் செல்வி புகார் செய்தார். ஆனால் எந்த போலீஸ் நிலையத்திலும் செல்வியின் புகார் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 6 மணி நேரம் அவர் அலைக்கழிக்கப்பட்டார். பின்னர் மெரீனா கடற்கரை போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தினர்.
இந்தத் தகவல் ஆணையர் ராஜேந்திரனுக்குக் கிடைத்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட பெண்ணை நேரில் அழைத்து அவர் விசாரணை நடத்தினார். நகை கண்டிப்பாக மீட்டுத் தரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இதையடுத்து இன்றுகாலை சம்பந்தப்பட்ட மூன்று காவல் நிலையங்களையும் சேர்ந்த போலீஸாரை அழைத்து விசாரணை நடத்தினார். புகார் மனுவைப் பெற மறுத்த போலீஸார் யார் என்பது அப்போது அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து அவர்கள் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
எந்தக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் அதை அவர்கள் பெற்று உரிய காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் ஒரு பெண்ணை இப்படி அலைய வைத்திருப்பது கவலை தருகிறது.
Saturday, June 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment