உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட எந்தத் தடையும் இல்லை-தலைமை நீதிபதி
சென்னை: சென்னை உயர்நீதி்மன்றத்திலும், மதுரை கிளையிலும் தமிழில் வாதாட வக்கீல்களுக்கு ஒருபோதும் தடை விதிக்கப்பட்டதில்லை. அப்படி ஒரு தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் கூறியுள்ளார்.
தமிழை வழக்கு மொழியாகக் கோரி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வக்கீல்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், இன்று சென்னை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி முருகேசன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச்சிடம் மனு அளித்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கூறுகையில்,
நீதிமன்றங்கள் வழக்கறிஞர்களின் சொத்து. நீதிபதிகள் வருவார்கள், போவார்கள். நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகள் காப்பாற்றப்பட வேண்டும். தமிழில் வாதாட நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அறிக்கையாக கொடுக்க முடியாது. இதை அனைத்து நீதிபதிகளிடமும் அறிவுறுத்துகிறோம் என்றார்.
Tuesday, June 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment