ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: இங்கிலாந்து, பிரான்ஸ் ஆதரவு
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இங்கிலாந்தும், பிரான்சும் ஆதரவு தெரிவித்துள்ளன.
கனடாவில் நடந்து வரும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை சந்தித்து பேசினார்.
அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்த டேவிட் கேமரூனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஜி 20 நாடுகளின் பொருளாதார மீட்சி நடவடிக்கையில் கவனம் செலுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பை ஏற்று அடுத்த மாதம் இந்தியா வருவதாக டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தம் குறித்து விவாதித்த டேவிட் கேரரூன், பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இங்கிலாந்து துணை நிற்கும் என்றார்.
டேவிட் கேமரூனை தொடர்ந்து மன்மோகன் சிங்கை சந்தித்த பிரான்ஸ் அதிபர் சர்கோசி, ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பிரான்ஸ் துணை நிற்கும் என்றார்.
நாடுகளின் மேம்பாட்டில் மட்டுமின்றி உலக விவகாரங்களிலும் இந்தியா அக்கறை காட்ட வேண்டும் என்றும் சர்கோசி வலியுறுத்தினார்.
மன்மோகன் சிங் அழைப்பை ஏற்று நவம்பர் மாதம் இந்தியா வருவதாக சர்கோசி தெரிவித்துள்ளார்.
Sunday, June 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment