பாக். தர்ஹாவில் 2 மனித குண்டு தாக்குதல்-42 பேர் பலி
லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் நகரில் சூஃபி தர்ஹா ஒன்றில் இரு தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 42 பேர் பலியாயினர். 173 பேர் காயமடைந்தனர்.
ஹஜ்ரத் சையத் அலி பின் உஸ்மான் ஹஜ்வேரி என்ற சூஃபி மதத் தலைவர் அடக்கம் செய்யப்பட்ட தாதா தர்பார் தர்ஹா என்ற தலத்தில் நேற்றிரவு இந்தத் தாக்குதல் நடந்தது.
தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால், அல்-கொய்தா, தலிபான் தீவிரவாதக் கும்பல் தான் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இந் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பாகிஸ்தான் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இசை, பாடல், நடனம் ஆகியவற்றை ஆதரிக்கும் இஸ்லாத்தின் சூஃபியிஸத்தை தலிபான் போன்ற அமைப்புகள் ஏற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த லாகூர் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் சையத் யூசுப் ராஸா கிலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனித உயிர்கள் மீது மரியாதையும் கிடையாது. மனிதாபிமானமோ அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தருவதோ, எதைப் பற்றியும் தீவிரவாதிகளுக்கு கவலை கிடையாது என்றார்.
Saturday, July 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment