அமெரிக்காவில் டொர்னாடோ சூறாவளிக்கு 10 பேர் பலி
அமெரிக்காவில் உள்ள மிசிசிபி மாகாணத்தை கடும் டொர்னாடோ சூறாவளித் தாக்கியது இதில் 10 பேர் பலியாகியுள்ளனர். இதில் 3 குழந்தைகள் அடங்கும், மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கட்டிடத்தின் கூரைகள் பறந்தத்ன, வீடுகள் பிய்ந்து தரைமட்டமாயின, வாகனங்கள் கவிழ்ந்தன, சாலையில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
யாஸூ என்ற இடமும், ஹோம்ஸ், மற்றும் காடா பகுதிகள் இந்தச் சூறாவளியால் பலத்த சேதம் அடைந்துள்ளதாக மிசிசிபி நெருக்கடி நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த பயங்கர டொர்னாடோ புயல் லூசியான, அர்கன்ஸாஸ் மற்றும் அலபமா மாகாணங்களையும் தாக்கியுள்ளது.
இப்பகுதிகளில் மோசமன வாநிலை தொடர்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Sunday, April 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment