அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியும் விஸ்வ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா வரவில்லை.
நேற்று விசாரணைக்கு வருமாறு எஸ்ஐடி தொகாடியாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து தொகாடியாவை விசாரிக்க திட்டமிட்டு இந்த சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் நேற்றைய விசாரணைக்கு தொகாடியா வரவில்லை. இதுகுறித்து விஎச்பி தரப்பில் கூறுகையில் வட இந்தியாவில் தொகாடியா சுற்றுப்பயணத்தில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
தொகாடியாவுக்காக நேற்று முழுவதும் எஸ்ஐடி அதிகாரிகள் காத்திருந்தனர். இருப்பினும் அவர் வரவில்லை. இதையடுத்து மீண்டும் எப்போது தொகாடியாவை அழைப்பது என்பது குறித்து எஸ்ஐடி இன்னும் முடிவு செய்யவில்லை.விரைவில் புதிய சம்மன் அனுப்ப்ப்படும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, April 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment