
அண்டம் உருவாக்கத்திற்கு அறிவியலர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடு சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெருவெடிப்பு அல்லது பெரும்பிரளயம் (Big Bang) என்பதாகும். பெருவெடிப்பு நிகழ்வுக்குப்பின் அந்தக் காலகட்டத்தில் அண்டம் என்பது 10000 டிகிரி உயர் வெப்ப நிலையில் வெறும் வாயுக்களாலான ஒரு பெரிய தீக்கோளமாகும். அது விரிந்து பரவி பரவி குளிரும் தன்மை உடையதாய் இருந்தது. வெப்பம் தணியத் தொடங்கியதும் முதலில் அணுக்கருவின் நுண்துகள் உருவாகி அதன் பின்னர் புரோட்டான் எலக்ட்ரான் ஆகியன உருவாகின.
பின்னர் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப்பின் அணுக்களின் ஈர்ப்பு விசை, வெப்பநிலை தணிதல் போன்ற காரணங்களால் தொடக்கத்தில் ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம் ஆகிய அணுக்கருக்கள் உருவாகி, விண்மீன் கூட்டங்கள் உருவாக அடிப்படை காரணிகளாக (Protogalaxy) அமைந்தன. மேலும் மேலும் அணுக்கரு இணைவு, வெப்பம், குளிர்தல், ஈர்ப்பு விசை ஆகிய காரணங்களால் சுமார் 500கோடி ஆண்டுகளுக்குப்பின் விண்மீன்கூடங்கள் உருவாகி பின்னர் அவற்றில் நட்சத்திரங்கள் உருவாகியிருக்கும் என்பதும், நம் சூரியன் உருவாகி 1000கோடிஆண்டுகள் இருக்கும் என்பதும் வானவியலர் கருத்து.
விண்மீன் கூட்டங்கள் கொத்துக் கொத்தாதாக (Super cluster) அண்டவெளியில் ஈர்ப்பு விசையினால் குறிப்பிட்ட இடங்களில் பின்னி பிணைந்து கிடக்கின்றன. லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆனபோதிலும் இன்னும் இந்த அண்டம் மேலும் மேலும் விரிந்து கொண்டுதானிருக்கிறது என விஞ்ஞானம் கூறுகின்றன.
திருக்குர்ஆன் என்ன கூறுகிறது.....
(21:30) வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே(அல்லாஹ்)பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டாமா?.
(41:11) பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான், ”விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்” என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். ”விரும்பியே கட்டுப்பட்டோம்” என்று அவை கூறின.
No comments:
Post a Comment