Wednesday, April 14, 2010
ஈரான் மீது பொருளாதார தடை : இந்தியா எதிர்ப்பு
வாஷிங்டனில் அணுசக்தி பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங், ’’அணு ஆயுத விவகாரம் உலக அளவில் பெரும் சவாலாக இருக்கிறது. அணு ஆயுதங்களோ, இல்லை அணு ஆயுதம் தயாரிக்கும் தொழில்நுட்பமோ பயங்கரவாதிகள் கையில் சிக்கிக் கொண்டால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும்.அணுஆயுத பாதுகாப்புக்கு உலகளாவிய அணுசக்தி நட்புறவு மையம் ஒன்றை ஏற்படுத்த தான் விரும்புவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு நாடும் அணுசக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முழு உரிமை இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்’’என்று கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment