அமெரிக்காவில் தொடரும் பொருளாதார சீர்குலைவு- 5 மாதங்களில் 73 வங்கிகள் திவால்
நியூயார்க்: அமெரிக்காவில் பொருளாதார சீர்குலைவு இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. கடந்த ஐந்து மாதங்களில் 73 வங்கிகள் அங்கு மூடப்பட்டுள்ளன. மேலும் பல வங்கிகள் வரும் நாட்களில் திவாலாகும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மாதத்திற்கு சராசரியாக 14 அமெரிக்க வங்கிகள் திவாலாகி வருகின்றனவாம். உலக அளவில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டதிலிருந்து இதுவரை அமெரிக்காவில் 775 வங்கிகள் திவாலாகி மூடப்பட்டுள்ளனவாம்.
இந்த நிலை மேலும் தொடரும், மேலும் பல வங்கிகள் சீர்குலையும் என அமெரிக்க பெடர் டெபாசிட் இன்சூரன்ஸ் கழகம் எச்சரித்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் 73 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. அனைத்துமே நடுத்தர மற்றும் சிறிய வங்கிகள்.
மே மாதம் மட்டும் 9 வங்கிகளை அமெரிக்காவில் மூடியுள்ளனர்.
Sunday, May 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment