ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்-விமானங்கள் ரத்து
மும்பை: ஏர் இந்தியா ஊழியர்கள் இன்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சம்பளம் வழங்குவதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த திடீர் வேலை நிறுத்தத்தை பொறியாளர்கள், விமான ஊழியர்கள் மேற்கொண்டனர்.
நாடு முழுவதும் உள்ள பணியாளர்களில் 25,000 பேர் இதில் பங்கேற்றனர்.
சிறந்த பணிச்சூழல், விரைந்த சம்பளம், மங்களூர் விபத்துக்கள் போன்ற சமாச்சாரங்களை வெளிப்படையாக விவாதிப்பதற்கு போடப்பட்டுள்ள தடையை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்துள்ளனர்.
இந்த திடீர் ஸ்டிரைக் காரணமாக பல விமானங்களின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டவர்களில் சிலர் போராட்டத்தில் ஈடுபடாத சில ஊழியர்களைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மங்களூரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி அந்த நிறுவனத்தின் பெயர் கெட்டுப் போயுள்ள நிலையில் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் பேச்சுவார்த்தைகளைத் துவக்கியுள்ளார்.
Tuesday, May 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment