Tuesday, May 25, 2010

சென்னை: தமிழக எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியாகின்றன.

பத்தாம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி தேர்வுகள் கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கி ஏப்ரல் 7ம் தேதி முடிவடைந்தன. மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் ஏப்ரல் 9ம் தேதி முடிவடைந்தன.

பத்தாம் வகுப்பு தேர்வை 6,493 பள்ளிகளைச் சேர்ந்த 8,56,966 மாணவ, மாணவிகள் எழுதினர்.

மெட்ரிகுலேஷன் தேர்வை 3,138 பள்ளிகளைச் சேர்ந்த 1,30,020 மாணவ, மாணவியர் எழுதினர். ஆங்கிலோ-இந்தியன் தேர்வை 41 பள்ளிகளைச் சேர்ந்த 4,492 பேரும், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,593 பேரும் எழுதினர்.

இந் நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (26ம் தேதி) காலை 9 மணிக்கு வெளியாகின்றன.

தேர்வு முடிவுகளை உடனுக்குடன் காண தட்ஸ்தமிழ் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. http://results.oneindia.in/ பக்கத்தில் முடிவுளைக் காணலாம்.

No comments:

Post a Comment

Blog Archive

About This Blog

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP