ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த போக்குவரத்து காவலர்!
டெல்லி: பெண்ணை ஏமாற்றி காரில் ஏற்றிச் சென்ற போக்குவரத்துக் காவலர், அவரை தனது நண்பருடன் சேர்ந்து ஓடும் காரிலேயே பலாத்காரம் செய்தார்.
டெல்லியில் இச் சம்பவம் நடந்தது. ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த 30 வயது பெண் தென் கிழக்கு டெல்லியில் லஜ்பத் நகர் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு அப் பகுதியில் டிராபிக் கட்டுப்பாட்டு பணியில் நிற்கும் சாணக்கியாபுரி டிராபிக் காவல் நிலையத்தில் பணியாற்றும் முகேஷ் குமார் பழக்கமானார்.
சாலையில் நடக்கும்போது ஹலோ சொல்லிக் கொள்வது வழக்கம்.
இந் நிலையில் அந்தப் பெண் சில நாட்களுக்கு முன் நடந்து சென்றபோது முகேஷும் விமான நிலையத்தில் பணியாற்றும் அவரது நண்பர் சுதிர் குமாரும் காரில் வந்து பேச்சு கொடுத்தனர்.
லிப்ட் தருவதாகக் கூறி அந்தப் பெண்ணை காரில் ஏற்றிக் கொண்டு பலாத்காரம் செய்தனர். கன்னாட் பிளேஸ், சாணக்கியாபுரி பகுதியில் கார் சென்றபோதே இந்தச் சம்பவம் நடந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து தப்பியோடிய அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் தந்தார்.
இதையடுத்து போக்குவரத்துக் காவலரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். சம்பவத்தின்போது இருவரும் போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
இது போன்ற கேடுகெட்டவர்களால் தான் காவல்துறைக்கே கேட்டபெயர்.
Tuesday, May 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment