எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்!
நெல்லை: எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்துள்ள மாணவி ஜாஸ்மின், வீதி வீதியாக தெருக்களில் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள் ஆவார்.
பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று திருநெல்வேலி டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜாஸ்மின் முதலிடம் பிடித்துள்ளார்.
இவரது தந்தை சேக் தாவூது, தெருத்தெருவாக ஜவுளித் துணி விற்கும் தொழிலாளி ஆவார்.
ஜாஸ்மின் படித்த பள்ளியில் இந்த ஆண்டு 522 மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். அவர்களில் 504 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97 சதவீத தேர்ச்சியாகும்.
ஜாஸ்மின் நிருபர்களிடம் கூறுகையி்ல், சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மார்க் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 98 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.
பிளஸ்-1ல் கம்ப்யூட்டர் பாடப் பிரிவில் சேரவுள்ளேன். எதிர்காலத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக விருப்பம். பட்டப் படிப்புக்குப் பின் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதவும் ஆசைப்படுகிறேன் என்றார்.
Wednesday, May 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment