தண்டவாளம் தகர்ப்பு : பிடிபட்ட 9 பேரிடம் ரகசிய விசாரணை
மலைக்கோட்டை விரைவு ரெயிலைக் கவிழ்க்க தண்டவாளம் குண்டுவைத்து தகர்க்கப்பட்ட சதி தொடர்பான வழக்கு க்யூ பிரிவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழர் இயக்கத்தை சேர்ந்த 9 பேரை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதைகளில் ரோந்துப் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க திட்டமிட்டு நடந்த இந்த சதியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் ரயில் கார்டு கொடுத்த எச்சரிக்கையால் மலைக்கோட்டை ரயில் மெதுவாக இயக்கப்பட்டு, குண்டு வெடித்த இடத்துக்கு 10 அடி தூரத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்தும் உயிர்ழப்பும் தவிர்க்கப்பட்டுள்ளது.
Sunday, June 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment