மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆசிரியை மீது தாக்குதல்
நாகர்கோவில் & நெல்லை: சுசீ்ந்திரம் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியை தாக்கப்பட்டார்.
நாகர்கோவிலையடுத்த பள்ளம் பகுதியி்ல் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் அல்போன்சம்மாள். இவர் தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
பொட்டல்விளை பகுதியில் உள்ள வீடுகளில் கணக்கெடுப்பு பணி நடத்தி வருகிறார். நேற்று மாலையில் வீடுகளில் உள்ளவர்களின் விவரங்களை சேகரித்து கொண்டிருந்தார்.
அந்தப் பகுதியை சேர்ந்த வேலப்பன் என்பவரின் வீட்டுக்கு கணக்கெடுப்புக்கு சென்றார். வீட்டில் வேலப்பன் உள்ளிட்டவர்கள் இருந்துள்ளனர். வீட்டில் உள்ளவர்களின் பெயர்கள் மற்றும் விபரங்களை கேட்டறிந்தவர், பின்னர் கணக்கெடுப்புக்குத் தேவைப்படும் வீட்டில் உள்ள பொருட்களின் விபரங்களை கேட்டார்.
திடீரென ஆத்திரம் அடைந்த வேலப்பன் இவ்வளவு கேள்விகளா கேட்பீர்கள் என கூறி தரையில் அமர்ந்திருந்த அல்போன்சம்மாளை காலால் மீதித்து கீழே தள்ளினார். இதில் அவருக்கு கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் வைத்திருந்த ஆவணங்களும் சிதறின.
பயந்து ஓடிய அவரை வேலப்பன் கல்லை எறிந்து தாக்கினார்.
இதையடுத்து அப் பகுதி பொதுமக்கள் திரண்டு அல்போன்சம்மாளை காப்பாற்றினர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் அவர் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வேலப்பனை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இன்று அவரை கைது செய்தனர்.
குறிப்பு - மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புனர்வு மக்கள் மத்தியில் இல்லாததே இதற்கு காரணம். ஒரு சமுதாயம் தங்களுக்கு தேவையான இட ஒதுக்கீடு மற்றும் அரசு நல திட்டத்தை இம்மக்கள் தொகையை அடிப்படையாகவே வைத்து வழங்குகின்றன, என்பதை மக்கள் அறியாத வரை அச்சமுதாயம் முன்னேறாது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரசு நியமித்தவர்கள் வந்தால் மட்டும் அவர்களுக்கு உரிய அனைத்து பதிலையும் கூறுங்கள்.
Saturday, June 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment