மருத்துவக் கவுன்சிலிங்: மாணவர்களுக்கு தேர்வுக் குழு அறிவுறுத்தல்
சென்னை: மருத்துவக் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வங்கிகளில் மட்டும் டி.டி. எடுக்குமாறு மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவுறுத்தியுள்ளது. மருத்துவப் படிப்புக்கு உரிய ரூ.10,500 கட்டணம், கவுன்சிலிங் கட்டணம் ரூ.500 ஆகியவற்றுக்கு டி.டி. அளிக்க எவருக்கும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. எனவே தனி நபர் எவரிடமும் பெறாமல், வங்கிகளில் மட்டும் இந்தத் தொகைகளுக்கான டி.டி.யை ‘Secretary, Selection Committee, Kilpuak, Chennai’ என்ற பெயருக்கு எடுக்குமாறு மாணவர்களை மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி உஷார்படுத்தியுள்ளார். அனைத்து வகுப்பினரும் கவுன்சிலிங் கட்டணம் ரூ.500 க்கு தனியாக டி.டி. எடுத்து வர வேண்டும். கவுன்சிலிங் கலந்து கொள்ள அழைப்புக் கடிதம் வராத நிலையில், கவுன்சிலிங் அட்டவணைப்படி கட் ஆஃப் மதிப்பெண் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் கவுன்சிலிங் கலந்து கொள்ளும்போது மாணவ மாணவியருக்குத் தேவையான 16 முக்கிய விஷயங்கள், சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
Thursday, June 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment