குஜராத், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
முழு அடைப்பு போராட்டம் காரணமாக பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகாவிலும், இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வரும் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் முழு அடைப்பு போராட்டம் முழு அளவில் நடைபெற்று வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் முழு அளவில் நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் நூற்றுக்கணக்கான லாரிகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
தனியார், அரசு பேருந்துகளும் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இடதுசாரிகள் ஆளும் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முழு அடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிற்கு செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நாகர்கோவில், தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் களியக்காவிளை மட்டுமே இயக்கப்படுகின்றன.
Monday, July 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment