ஈரானில் இருந்து இந்தியாவுக்கு குழாய் மூலம் எரிவாயு
ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு வரும் திட்டம் குறித்து இந்தியா- ஈரான் கூட்டு கமிட்டி கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று அயலுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா- ஈரான் நல்லுறவு தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய- ஈரான் கூட்டுகமிட்டி கூட்டம் டெல்லியில் வரும் 8ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
அதில் அயலுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஈரான் பொருளாதாரத்துறை அமைச்சர் சம்சுதீன் ஹூசைனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவுக்கு பலனளிக்கும் பல ஆக்கப்பூர்வமான முடிவுகள் இந்த கூட்டடத்தில் எட்டப்படும் என்றும் நிருபமா ராவ் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு வரும் திட்டம் பற்றியும், துர்க்மேனிஸ்தான், பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் எரிவாயு கொண்டு வரும் திட்டம் பற்றி இச்சந்திப்பில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
Tuesday, July 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment