'அடங்க மறுக்கும் இலங்கை...!கையாலாகாத பான் கீ மூன்'
ஐ.நா. அலுவலகத்தின் முற்றுகைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பு என காலம் கடந்து கூறும் பான் கீ மூன், இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவுக்கு, விசா கோருவதாக தெரியவில்லை என்று ஐ.நா. செயல்பாடுகள் குறித்த செய்திகளை வெளியிடும் இன்னர் சிட்டி பிரஸ் கூறியுள்ளது.
ஐ.நா. ஆலோசனை குழுவை கலைக்கும் வரை ஐ.நா. அலுவலர்களை பணயம் வைக்குமாறு கோரிய இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸவை ஒரு தனிப்பட்டவர் என ஐ.நா. கூறி ஒரு வாரத்திற்கு பின்னர், மிகவும் தாமதமாக ஜுலை மாதம் 8 ஆம் தேதி அரசாங்க அமைச்சரவை உறுப்பினரால் இந்த பணய நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கு தலைமையும் தாங்கியது ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என்று பான் கீ மூன் குறிப்பிட்டதை இன்னர் சிட்டி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் ஐ.நா. கட்டிடத்தில் அமைந்திருந்த தமது அலுவலகம் தடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவிக்க மறுத்தஐ.நா. ஒருங்கிணைப்பாளர் நீல் பூஹ்னேயை, தற்பொழுது திருப்பி அழைத்துள்ள பான் கீ மூன், கொழும்பிலுள்ள ஐ.நா. அபிவிருத்தி திட்ட அலுவலகத்தையும் மூடிவிடுவதென தீர்மானித்துள்ளார் என்றும் இன்னர் சிட்டி தெரிவத்துள்ளது.
இதேவேளை, ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் நிர்வாக அதிகாரி ஹெலன் கிளார்கின் அல்லது திட்டத்தின் நிறைவேற்று சபையின் நிலைமை என்ன என்பது பற்றி தெரியவில்லை.
ஐ.நா.வின் மிக முக்கிய பணிகள் தொடர்வதை உறுதிப்படுத்துமாறு பான் கீ மூன் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கையில், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான நிபுணர்கள் குழு உறுப்பினர்களுக்கு விசா வழங்க மறுக்கப்பட்டதை மறுபசீலனை செய்யக் கோருவதும் அடங்குகிறதா என்று இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
Saturday, July 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment