மேட்டூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நடிகை குஷ்புக்கு உத்தரவு
கற்பு பற்றி கருத்து கூறிய வழக்கில் ஆஜராக வந்த போது முட்டை வீசிய வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி மேட்டூர் நீதிமன்றம் நடிகை குஷ்புக்கு உத்தரவிட்டுள்ளது.
பெண்களின் கற்பை பற்றி கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை குஷ்பு. இது தொடர்பான வழக்கில் மேட்டூர் நீதிமன்றத்திற்கு வந்த போது குஷ்பு மீது தக்காளி, முட்டை வீசப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 41 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு மேட்டூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை குஷ்பு ஆகஸ்ட் 4ஆம் தேதி நேரில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார்.
Wednesday, July 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment