Saturday, July 31, 2010

தமிழகத்தில் பல ரயில்களின் நேரம் மாற்றம்!

சென்னை: தமிழகத்தில் பல ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இரவு 8.50 மணிக்கு பதிலாக 8.05 மணிக்கும்,

எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.15 மணிக்கு பதிலாக இரவு 8.50 மணிக்கும்,

எழும்பூரில் இருந்து மதுரை வரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.45 மணிக்கு பதிலாக இரவு 9.15 மணிக்கும்,

எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7.55 மணிக்கு பதிலாக இரவு 9.40 மணிக்கும் புறப்பட்டு செல்லும்.

அதே போல திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 6.30 மணிக்கு பதிலாக மாலை 6.45 மணிக்கு புறப்படும்,

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 6.15 மணிக்கு பதிலாக மாலை 5 மணிக்கும்,

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் இரவு 10 மணிக்கு பதிலாக 10.20 மணிக்கும் திருச்சியிலிருந்து புறப்படும்.

மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்டு 5ம் தேதி முதல் இரவு 9.45 மணிக்கு பதிலாக இரவு 9.10 மணிக்கு புறப்படும்.

நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ஆகஸ்டு 6ம் தேதி முதல் ரயில் 7.40 மணிக்குப் பதிலாக மாலை 5 மணிக்கு அந்த ஊரில் இருந்து புறப்படும்.

அதே போல மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 5.30 மணிக்கு வர வேண்டிய ரயில் காலை 5.10 மணிக்கும்,
நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு காலை 8.55 மணிக்கு வரவேண்டிய ரயில் காலை 6 மணிக்கும், திருநெல்வேலியில் இருந்து எழும்பூருக்கு காலை 6.15 மணிக்கு வரவேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் 6.35 மணிக்கும்,
ராமேஸ்வரத்தில் இருந்து எழும்பூருக்கு காலை 6.40 மணிக்கு வரவேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.25 மணிக்கும், மதுரையில் இருந்து எழும்பூருக்கு காலை 7.55 மணிக்கு வரவேண்டிய ரயில் காலை 7.20 மணிக்கும்,

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 5.10 மணிக்கு வரவேண்டிய மலைகோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 5.30 மணிக்கும் வந்து சேரும்.

இதே போல எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் காலை 9 மணிக்குப் பதிலாக காலை 8.15 மணிக்கு சென்று சேரும்.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலிக்கு காலை 8.50 மணிக்கு பதிலாக காலை 8.30 மணிக்கும்,

எழும்பூரில் இருந்து காலை 6.45 மணிக்கு மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் காலை 6.15 மணிக்கும், சென்னை எழும்பூரில் இருந்து காலை 8.35 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடைய வேண்டிய ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் காலை 11.45 மணிக்கும் வந்து சேரும்.

இதில் நாகர்கோவில்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் 7ம் தேதி முதலும், மதுரை-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் 6ம் தேதி முதலும், மற்ற ரயில்கள் 2ம் தேதி முதலும் நேரம் மாற்றப்பட்ட அட்டவணைபடி இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Blog Archive

About This Blog

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP