100 பயங்கரவாத இயக்கங்களுக்கு மத்திய அரசு தடை
ஆயுத மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அல் - காய்தா இயக்கத்துடன் தொடர்புடைய உலகம் முழுவதுமுள்ள 100 பயங்கரவாத இயக்கங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தோனேஷியாவின் பாலியில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஜெமாஹ் இஸ்லாமியா, லிபிய இஸ்லாமிய ஜிகாத் குழு, மொராக்கான் இஸ்லாமிக் குழு, எகிப்தியன் இஸ்லாமிக் ஜிகாத், பிலிப்பைன்ஸ் இஸ்லாமிய நிவாரண இயக்கம்,உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் போன்ற 100 மிகப்பெரிய இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் தடை செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே 33 பயங்கரவாத இயக்கங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே தடை விதித்து உள்ளது. அவற்றுடன் சேர்த்து தற்போது மேலும் 100 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sunday, May 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment