அமெரிக்கா தீப்பற்றி எரியும்
அமெரிக்கா தீப்பற்றி எரியும் என்று தாலிபான் இயக்கம் புதிய மிரட்டலை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்டிருந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் பொறுப்பு ஏற்பதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவை எரித்து விடுவோம் என்று புதிய மிரட்டலை விடுத்து அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அசீம் தாரிக் பேசிய வீடியோ படம் வெளியாகி உள்ளது.
"டைம்ஸ் சதுக்க வெடிகுண்டு வெடிக்காவிட்டாலும், விரைவில் அமெரிக்காவில் குண்டுகள் வெடிக்கும்.அதில் அமெரிக்கா தீப்பற்றி எரியும்.
அமெரிக்காவின் கூட்டாளிகளுக்கும் அதே கதிதான் ஏற்படும். அமெரிக்காவின் செயல்திட்டத்தை பின்பற்றும் பாகிஸ்தான் அரசு தூக்கி எறியப்படும்.எங்களை நசுக்க முடியாது" என்று அதில் அவர் பேசியுள்ளார்.
Sunday, May 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment