கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது வெடித்து சிதறியதில் 169 பயணிகள் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
துபாயில் இருந்து திரும்பியபோது விமான நிலையம் அருகே இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினரும், அவசர கால மீட்பு குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்றும் மேலும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் கர்நாடகா, கேரளாவை சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் விமான பணியாளர்கள், பயணிகள் உள்பட 169 பேர் உயிரிழந்துள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
விமான விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.
போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் விமானம் தரையிறங்கியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment