திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் காதலனுடன் மணப்பெண் ஓட்டம்
ஆலங்குளம்: திருமணமான அன்றே மணக்கோலத்தில் காதலனுடன் கேரளாவுக்கு தப்பியோடிய இளம்பெண்ணை ஆலங்குளம் போலீசார் மடக்கி பிடித்தனர்.
கயத்தாறு அருகேயுள்ள அய்யனார் ஊத்து இந்திரா நகரை சேர்ந்தவர் முகமது காசிம். இவரது மகள் ஆயிஷா. இவருக்கும் அதே ஊர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துபட்டன் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதல் இருந்து வந்ததுள்ளது.
இந்நிலையில் ஆயிஷாவிற்கு சங்கரன்கோவிலை சேர்ந்த தீவான் மைதீன என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதன்படி நேற்று காலை அய்யனார் ஊத்தில் ஆயிஷாவுக்கும், திவான் மைதீனுக்கும் திருமணம் நடந்தது. பின்னர் மாலையில் மணப்பெண்ணுடன் மாப்பிள்ளை வீடு செல்வதற்காக கார் ஓன்றில் திவான் மைதீன், ஆயிஷா மற்றும் உறவினர்கள் சங்கரன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆயிஷா காதலன் முத்து பட்டன் தனது நண்பர்கள் அய்யனார்குளத்தை சேர்ந்த கொம்பையா, கணேசன், வடிவேல்ஆகியோருடன் பைக்கில் வந்து வன்னிக்கோனேந்தல் அருகே காரை மடக்கினார்.
காதலனை கண்டவுடன் ஆயிஷா காரை வி்ட்டு இறங்கி முத்துபட்டன் பைக்கில் ஏறிக் கொண்டார். அவர்கள் கேரளா செல்ல திட்டமிட்டு சுரண்டை வழியாக வந்து கொண்டிருந்தனர்.
மணப்பெண்ணுடன் வந்தவர்கள் இதுகுறித்து எஸ்பிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மணப்பெண்ணையும், அவரது காதலரையும் பிடிக்கும்படி எஸ்பி ஆஸ்ரா கர்க் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆலங்குளம் போலீசார் அத்தியூத்து அருகே மணப்பெண் ஆயிஷாவையும், அவரது காதலன் முத்துபட்டன் மற்றும் நண்பர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் ஆலங்குளம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகம் விசாரணை நடத்தினார்.
பின்னர் மணப்பெண் ஆயிஷா நேற்று இரவு நெல்லையில் உள்ள சரணாலயம் என்ற காப்பகத்தில் ஓப்படைக்கப்பட்டார். மேல்விசாரணைக்கு பின்பு இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Thursday, May 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment