பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி இன்று அறிவிப்பு
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடி வுகளை வெளியிடும் தேதியை தேர் வுத் துறை இன்று அறிவிக்கிறது.
பிளஸ் 2 தேர் வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி, மார்ச் 22ஆம் தேதி வரை நடை பெற்றது. தேர்வை சுமார் 7.5 லட்சம் மாணவர் கள் எழுதியுள்ளனர். 44 மையங்களில் விடைத்தாள் திருத் தப்பட்டன.
அனைத்து மாணவர்களுக்கும் மதிப் பெண் பட்டியல் தயாரிக்கும் பணி முடிவ டைந்து விட்டது. இதையடுத்து இன்னும் ஓரிரு நாளில் தேர்வு முடிவை அறி விக்க தேர்வுத் துறை முடிவு செய் துள்ளது.
கடந்த ஆண்டு பிளஸ்2 தேர்வு மே மாதம் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த சில வருடங்களாக பிளஸ்2 தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடம் 10ஆம் தேதியான நேற்று தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும் தவறினால் 12ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
ஆனால், நேற்று மாலை வரை தேர்வு முடிவு வெளியிடப்படுவது குறித்து எவ்வித தகவலையும் அரசு தேர்வுத்துறை வெளியிடவில்லை.
இது குறித்து தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்வு முடிவு தயார் நிலையில் உள்ளது. அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதனால் 14ஆம் தேதி தான் தேர்வு முடிவு வெளியிடப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
Tuesday, May 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment