உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்றம்
கிராம மற்றும் நகர உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு செல்லும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இதில் கிரீமிலேயர் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே. பாலகிருஷ்ணன் அடங்கிய 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், வரையறுக்கப்பட்ட பகுதிகளில் 50 சதவீதத்துக்கு மிகாமல் இடஒதுக்கீடு அளிக்கலாம்.
ஜனநாயகத்தை பரவலாக்குவது என்பது நிர்வாகத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது மட்டும் அல்ல, சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மக்களையும் அதில் பங்கேற்கச் செய்வதையும் குறிக்கும் என்று கூறியுள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சாசன சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை அளித்தனர்.
கிரீமிலேயர் என்பது பிற்படுத்தப்பட்டவர்களில் வசதிபடைத்தவர்கள் மற்றும் நன்கு கல்விபெற்று முன்னேறியவர்கள் அரசின் இடஒதுக்கீட்டை பயன்படுத்துவதில் இருந்து நீக்குவதைக் குறிக்கும். இதன் மூலம் உண்மையாகவே பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் பேர் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, May 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment