அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது: வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும்
சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் நாளை முதல் ஆரம்பமாகிறது. இந்த கத்தரி வெயில் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும்.
தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலமாகும். அதிலும் ஏப்ரல் 15 முதல் மே இறுதிவரை வரை வெயிலின் தன்மை கடுமையாக இருக்கும்.
பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த வருடம் கோடை காலம் முடிந்த பிறகும் 2-வது கோடை வந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த ஆண்டு கோடை தொடங்கி 1 மாதம் தாண்டிவிட்டது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது.
கோடை மழை பெய்த போதிலும் சென்னையில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக சாலைகள் எங்கும் அனல் காற்று வீசுவதால் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. இன்று தொடங்கும் அக்னி வெயில் 28ஆம் தேதி வரை மொத்தம் 25 நாட்கள் நீடிக்கிறது.
இந்த காலகட்டத்தில் தான் பொது மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். வெயிலில் அலைவதை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும். வெயிலில் அலைவதை தவிர்ப்பதன் மூலம் கோடை கால வெப்ப நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
Monday, May 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment