மே மாதம் குடும்ப அட்டைக்கு 5 லிட்டர் மண்எண்ணெய்
சென்னை உள்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மாவட்ட தலைநகரம், நகராட்சி, நகரியம் மற்றும் பேரூராட்சி பகுதியைச் சார்ந்த எரிவாயு இணைப்பு இல்லாத புதிதாக வழங்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 லிட்டர் மண்எண்ணெய் மே மாதத்திற்கு மட்டும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் கிராமப் பகுதியை சார்ந்த எரிவாயு இணைப்பு இல்லாத மற்றும் மாவட்ட தலைநகரம், நகராட்சி, நகரியம், பேரூராட்சி, ஏனைய கிராமப்பகுதியைச் சார்ந்த ஒரு எரிவாயு இணைப்பு பெற்றுள்ள புதிதாக வழங்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 3 லிட்டர் வீதமும் மண்எண்ணெய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இது சம்பந்தமாக புகார்கள் இருப்பின் சம்பந்தப்பட் உணவுத்துறை உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
Monday, May 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment