உசிலம்பட்டி அருகே சிகரெட் பிடித்த வாலிபர் கருகி பலி
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே சட்டையில் சிந்திய பெட்ரோலை அலட்சியம் செய்து சிகரெட் பிடித்த வாலிபர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது செட்டியபட்டியைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது பைக்கில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால் கேனில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு வந்து ஊற்றினார். அப்போது எதிர்பாராத விதமாக சிந்திய பெட்ரோல் இவரது கையிலும் சட்டையிலும் பட்டது. ஆனால் இதனை இவர் அலட்சியமாக விட்டு விட்டார். பின்னர் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த போது, சிகரெட் கங்கு இவரது சட்டையில் பட்டு குபீரென்று தீப்பிடித்தது. இந்த திடீர் தீயில் அதிர்ச்சி அடைந்த இவர் அலறி அடித்து அங்கும் இங்கும் ஓடினார். இதில் சட்டை முழுவதும் தீப்பிடித்துக் கொண்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். கருகிய நிலையில் இருந்த இவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி சுப்புராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Monday, May 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment