லாகூர் மசூதியில் பயங்கரவாதத் தாக்குதல்: 30 பேர் கொல்லப்பட்டனர்
லாகூரிலுள்ள அஹமதி பிரிவு மசூதிகளைக் குறிவைத்து இன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை தொழுகை நடந்துக்கொண்டிருந்தபோது ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்குள்ள மக்களை சுட்டுத் தள்ளியுள்ளனர். இத்தாக்குதலில் 30 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமுற்றதாகவும் மீட்புப் படை அதிகாரி பாஹிம் ஜாஹென்சப் கூறியுள்ளார்.
மார்ச் மாதத்தில் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு மீண்டும் லாகூரில் தாக்குதல் நடந்துள்ளது. அஹமதி உள்ளிட்ட மற்றப் பிரிவு முஸ்லீம்களை குறிவைத்து சுன்னி பிரிவு முஸ்லீம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது பாகிஸ்தானில் அவ்வப்போது நடந்துவருகிறது.
Friday, May 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment