ஒவ்வொரு மணி நேரமும் 3 இந்தியர் பிரிட்டிஷ்வாசியாகிறார்கள்!
லண்டன்: ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சராசரியாக மூன்று இந்தியர்கள் பிடிட்டிஷ் குடியுரிமை பெற்று செட்டிலான வண்ணம் உள்ளார்கள் என்கிறது அதிகாரப்பூர்வ ஆய்வு ஒன்று.
டெய்லி எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் 2009-ம் ஆண்டு மட்டும் 26,535 இந்தியர்கள் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளனர்.
இதனைக் கணக்கிட்டால், நாளொன்றுக்கு 70, மணிக்கு 3 இந்தியர்கள் பிரிட்டிஷ் குடியுரிமை பெறுகிறார்கள்.
Read: In English
கடந்த ஆண்டு மட்டும் 203705 வெளிநாட்டவர் பிரிட்டன் குடியுரிமைப் பெற்றுள்ளனர். இவர்களில் 13 சதவிகிதம் பேர் இந்தியர்கள். 2008-ல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர்களில் 58 சதவிகிதம் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் பிரிட்டிஷ் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்த புதிய அரசு முடிவு செய்துள்ளது.
Sunday, May 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment