மத்திய அமெரிக்காவில் புயலுக்கு 82 பேர் பலி
கவுதமாலா: மத்திய அமெரிக்க நாடுகளான கவுதமாலா, எல் சல்வடார், மெக்சிகோ மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் நேற்று வீசிய அகதா புயலுக்கு 82 பேர் பலியாயினர். மத்திய அமெரிக்க பகுதியில் நேற்று அகாதா என்று பெயரிடப்பட்ட புயல் வீசியது. மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசிய புயலால், கவுதமாலாவில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டது. கவுதமாலாவில் மொத்தம் 73 பேர் பலியாயினர். வீடுகளை இழந்து 74 ஆயிரம் பேர் தவிக்கின்றனர். எல்சல்வடார் நாட்டிலும், பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஹோண்டுராஸ் நாட்டிலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு வெள்ள நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அமெரிக்க பகுதிகளில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள அமெரிக்கா மற்றும் கொலம்பியா நாடுகள் ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளன.
மற்ற நாடுகள் மீது கழுகு பார்வை பார்க்கும் அமெரிக்காவை இறைவன் இயற்கை என்ற ஆயுதத்தால் அதன் ஓரங்களை அழிக்கிறான். பிற நாடுகளில் குண்டு மழை.. அணுஆயுத புயல் என வீசும் அமெரிக்காவை... உன்மையாக புயலும், மழை என அழித்துவருகிறது.
Monday, May 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment