இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்குதல் கூடாது: நியூயார்க் மேயர் எச்சரிகை
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வெடிகுண்டு வைத்த குற்றவாளி அமெரிக்க பாகிஸ்தானியர் என தெரிய வந்திருப்பதால், உள்ளூர் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கர்களை நியூயார்க் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தானியர்கள் அல்லது இஸ்லாமியர்களுக்கு எதிரான எந்த ஒரு பாரபட்சமான நடவடிக்கையையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று நியூயார்க் மேயர் மைக்கேல் புளூம்பர்க் எச்சரித்துள்ளார்.
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வெடிகுண்டு வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதியின் பெயர் பைசல் ஷாகத் என்பதும், இவர் பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெற்றவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Wednesday, May 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment