ஐஸ்லாந்தில் மீண்டும் ஒரு எரிமலை வெடிப்பு
ஐஸ்லாந்தில் மீண்டும் ஒரு எரிமலை வெடித்துள்ளதால் விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஐஸ்லாந்தில் உள்ள ஒரு பெரிய எரிமலை வெடித்து சிதறியதால் ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐஸ்லாந்து நாட்டில் மீண்டும் ஒரு எரிமலை வெடித்தது.அதில் இருந்து வெளியான குழம்பின் சாம்பல் காற்றில் பரவியுள்ளது. இதனால் வானம் முழுவதும் சாம்ப புகை மூட்டம் காணப்படுகிறது.
இந்த சாம்பல் புகை ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு பரவியதால் அங்கு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஸ்காட்லாந்து, அயர்லாந்து நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Wednesday, May 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment