அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட அதிகம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் புகார் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் மொத்தம் 10,951 சுய நிதி பள்ளிக்கூடங்கள் உள்ளன.
எந்தெந்த பள்ளிகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு முடிவு செய்து உள்ளது.
இதற்கான அறிவிப்பு இன்னும் 4,5 தினங்களில் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். கட்டண விவரம் பற்றி தமிழக அரசு அறிக்கை அனுப்பிய பின் பள்ளிகள் அந்த கட்டணத்தை மட்டும் தான் வசூலிக்க வேண்டும்.
கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரிய வந்தால் அல்லது புகார் வந்தால் அது பற்றி விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்தார்.
Saturday, May 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment