வங்கக் கடலில் புயன் சின்னம் : ஆந்திராவிற்கு எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 900 கி.மீ. தூரத்திலும், விசாகப்பட்டினத்தில் இருந்து 1,000 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் (19ஆம் தேதி முதல்) ஆந்திர கடலோர மாவட்டங்களில் பரவலாக பலத்த மழையோ அல்லது மிக பலத்த மழையோ பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியைப் பொறுத்தவரை 19 ஆம் தேதி முதல் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, May 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment