தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் பின்லேடனுக்கு முதலிடம்
அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் அல் கொய்தா இயக்கத் தலைவன் பின்லேடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறான்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் போர்ப்ஸ் என்ற பத்திரிகை உலகில் அதிகம் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் முதல் இடத்தில் உள்ளார். உலகில் மிக அதிகமாக தேடப்படும் நபர்களில் கடந்த 3 ஆண்டுகளாக பின்லேடன் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2வது இடத்தில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த உலகின் மிகப் பெரிய போதை பொருள் கடத்தல்காரனான ஜோகியூன் குஸ்மன் இருக்கிறான். மும்பை நிழல் உலக தாதாவாக திகழ்ந்த தாவுத் இப்ராகிம் 3வது இடத்தில் இருக்கிறான்.
Monday, May 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment