Thursday, May 20, 2010

மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 1 அதிகரிக்கிறது

மத்திய அரசு இயற்கை எரிவாயு விலை அதிகரிக்க முடிவு எடுத்துள்ளதால், மின் கட்டணம் யூனிட்டிற்கு ரூ.1 வரை அதிகரிக்கும் என்று மத்திய மின்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இன்று "பிக்கி" ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சுசில் குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில் இத்தகவலை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்," மின் கட்டணம் உயரும். கட்டணத்தை எவ்வளவு உயர்த்துவது என்று கணக்கிடவில்லை. ஆனால் மின்கட்டணம் யூனிட்டிற்கு ஒரு ரூபாய் உயர வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.

மின் கட்டணத்தை அதன் உற்பத்தி செலவு, மின்சாரம் கொண்டு செல்வதற்கான செலவு போன்றவைகளை கணக்கிட்டு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கிறது.

மத்திய அமைச்சரவை நேற்று மாலை இயற்கை எரிவாயுவின் விலையை இரு மடங்காக அதிகரித்தது. ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் விலையை 4.20 டாலராக உயர்த்தியது.

அத்துடன் மத்திய அமைச்சரவை நேற்று மின் உற்த்தி நிலையங்கள், உர தொழிற்சாலைகள், நகரங்களில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையையும் அதிகரித்தது.

இவைகளுக்கு முன்பு ஆயிரம் கன அடி இயற்கை எரிவாயுவின் விலையை ரூ.3,200 ஆக (ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் விலை 1.79 டாலர் ) நிர்ணயித்து இருந்தது. இதை நேற்று ரூ.6,818 ஆக (ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் விலை 3.82 டாலர் ) உயர்த்தியது.

No comments:

Post a Comment

Blog Archive

About This Blog

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP