
டெல்லி: நக்ஸலைட்டுகள் நம் ஆட்கள். எனவே, அவர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நக்ஸல்களிடம் மத்திய அரசு இன்னும் கடுமை காட்ட வேண்டும், அவர்களை மத்தியப் படைகளைக் கொண்டு ஒடு்க்க வேண்டும் என பாஜக மூத்த தலைவரான அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
அதே போல இந்தப் பிரச்சனையை நேரில் சந்தித்து வரும் சட்டீஸ்கர் பாஜக முதல்வர் ரமன் சிங், நக்ஸலைட்டுகள் தான் உண்மையிலேயே பெரிய தீவிரவாதிகள் என்றும், அவர்கள் ஆயுதங்களைக் கொண்டு நாட்டைக் கைப்பற்ற முயல்வதாகவும் கூறியுள்ளார்.
இந் நிலையில் நக்ஸலைட்டுகள் நம்முடைய ஆட்கள் என்றும், அவர்களுடன் பேச்சு நடத்தித் தான் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்றும் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அலிகாரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மோடி பேசுகையில், நக்ஸலைட்டுகள் நம்முடைய சொந்த மக்கள். அவர்களிடம் வன்முறை மூலம் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்பதை அரசு விளக்க வேண்டும். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க பேச்சுவார்த்தை தான் ஒரே வழி என்றார்.
மோடியின் இந்தப் பேச்சு பாஜகவிலேயே அதிர்ச்சி அலைகளைப் பரப்பியுள்ளது.
No comments:
Post a Comment