யு.எஸ். - தென்கொரியாவுக்கு அணு ஆயுதம் மூலம் பதிலடி: வட கொரியா
சியோல், சனி, 24 ஜூலை 2010
அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டாக இராணுவ ஒத்திகை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வடகொரியா,தங்களை தாக்கினால் அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இந்த வார இறுதியிலிருந்து அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டாக இணைந்து இராணுவ ஒத்திகை நடத்தி பார்க்க திட்டமிட்டுள்ளன.
ஆனால் இது தங்கள் நாடு மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையே என்று குற்றம்சாற்றியுள்ள வட கொரியா, தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது.
வடகொரியாவின் எல்லையையொட்டிய கடல் பகுதியில்,ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தென்கொரியாவின் போர்க்கப்பல் ஒன்று அண்மையில் கடலில் மர்மமான முறையில் மூழ்கியது.
வடகொரியாதான் இந்த கப்பலை மூழ்கடித்ததாக தென் கொரியாவும், அமெரிக்காவும் குற்றம்சாற்றியிருந்தன. ஆனால் அதனை வடகொரியா மறுத்திருந்தது.
அப்பொழுதிருந்தே வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது எந்த நேரமும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
Sunday, July 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment