திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்கி வைத்தார் கருணாநிதி
திருவாரூர்: ரூ. 100 கோடியில் நிறுவப்பட்டுள்ள புதிய திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைத்தார்.
திருவாரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி ரூ. 100 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை இன்று முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் புதிய மருத்துவக் கல்லூரியை தொடங்கி வைத்த முதல்வர், புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
பின்னர் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிப் பேசினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதை முடித்துக் கொண்டு கம்பன் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
முதல்வர் வருகையையொட்டி திருவாரூர் மருத்துவக் கல்லூரி வளாகம், தஞ்சை திலகர் திடல் உள்ளிட்டஇடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், இரு மாவட்டங்களிலும் திமுக கொடிகள், தோரணங்கள்,வரவேற்பு வளைவுகள் என கோலாகலமாக காணப்படுகிறது.
Monday, July 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment