குஜராத் மாநில முன்னாள் காவல்துறை டிஜிபி : சிபிஐ சம்மன்
சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் குஜராத் மாநில முன்னாள் காவல்துறை டிஜிபி பி.சி. பாண்டேவுக்கு நேரில் ஆஜராகுமாறு மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
வருகிற ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ விசாரணைக்கு நேரில் ஆஜராகி, கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று பாண்டேவுக்கு அனுப்பியுள்ள சம்மனில் சிபிஐ தெரிவித்துள்ளது.
சொராபுதீன் என்கவுண்டர் வழக்கை குஜராத் மாநில காவல்துறை சிஐடி அதிகாரிகள் விசாரித்துக்கொண்டிருந்தபோது, டிஜிபியாக இருந்தவர் பாண்டே.
இந்நிலையில் சோராபுதீன் என்கவுண்டர் வழக்கில், பாண்டேவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, July 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment